தேனி: சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம்; காவலர்கள் சஸ்பெண்ட்

தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில், சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.தேனி சிறையில் இருந்து தப்பியோடிய 15-க்கும் மேற்பட்ட கைதிகளில் இதுவரை மொத்தம் 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.அவ்வாறு தாக்கிவிட்டு 15-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைக்காவலர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.வாகன தணிக்கைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ். பிரவீன் கவுதம் உத்தரவின்பேரில், தேக்கம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்ட சிறை அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவை சுற்றிவளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, 15-க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரே நேரத்தில் தப்பி ஓடியதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்பேரில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தப்பி ஓடியவர்கள் எந்தெந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள்? எந்தெந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரங்களை சேகரித்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சஸ்பெண்ட்இந்த நிலையில், தப்பியோடியவர்களில் பிரவீன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர். இதில், தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை தனிப்படை கைது செய்தது.இதுதவிர ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், தப்பியோடிய 15-க்கும் மேற்பட்ட கைதிகளில் இதுவரை மொத்தம் 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில், சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறைக்கான டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top