சரக்கு வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து: கிளீனர் பலி.. 40 பயணிகள் காயம்

ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் களீனர் பலியாகியுள்ளார். மேலும், 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து நேற்று 46 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் வலசைப்பட்டி அருகே ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்த போது முன்னால் சரக்கு வேன் ஒன்று சென்றது. திடீரென சரக்கு வேன் டிரைவர் பிரேக் போட்டதால், பின்னால் வந்த ஆம்னி பேருந்து, சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், தனியார் ஆம்னி பேருந்து கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு 15 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே இடத்தில் மேலும், இரண்டு தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top