கண்மாய் நீரில் மூழ்கிய பொக்லைன் எந்திரம்: 2 நாட்கள் போராடி தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கண்மாய்க்குள் மூழ்கிய பொக்லைன் எந்திரத்தை 2 நாட்கள் தீவிர போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.கண்மாய் நீரில் மூழ்கிய பொக்லைன்
எந்திரம்தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கண்மாய் பகுதியில் தூர்வாரும் பணிகளுக்காக ஹிட்டாச்சி பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அது கண்மாயின் உட்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கண்மாய்க்கு நீர்வரத்து சட்டென அதிகரித்து, நிறுத்தப்பட்டிருந்த ஹிட்டாச்சி எந்திரத்தை முற்றிலுமாக நீர் மூழ்கடித்தது.இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கண்மாயில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனவே தொடர்ந்து 2 நாட்கள் தீவிரமாகப் போராடி, ராட்சத எந்திரம் மற்றும் மீட்பு உபகரணங்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய ஹிட்டாச்சி எந்திரத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு கரையேற்றி
னர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top