ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இல்லத்தில் கேக் வெட்டி அன்னதானம்

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக் கம் ஒன்றியம் ஆணைக்குன்னம் ஊராட் சியை சேர்ந்த வழக்கறிஞர் பரந்தாமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி மாவட்ட துணை செயலாளராக பொருப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவி செய்து வருகிறார். இந்நி லையில் இந்த வருடம் தன்மகன் யாழினி யன்இரண்டாம் பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் மதுராந்தகம் அருகே அமைந்துள்ள தனியார் பிரேம் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 நபர்கள் பெற்றோர்கள் ஆதரவின்றி தவித்து வரும் இல்லத்தில் கேக் வெட்டிகாலை சிற்றுண்டி மற்றும் இனிப்பு வழங்கினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தொண்டு நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்ட
னர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top