அமில வாயுவை சுவாசித்த தொழிலாளி உயிரிழப்பு: மானாமதுரை தனியார் ஆலைக்கு சீல்

தனியார் ஆலையில் அமில வாயுவால் தொழிலாளி உயிரிழந்தார். இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.தனியார் ஆலைசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 39). இவர் மானாமதுரை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த ஆலையில் கடற்பாசியில் இருந்து
இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுவதுடன், வாசனை திரவியங்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆலையில் ஜேசுதாஸ், பழனிச்செல்வன். பாலமுருகன் ஆகிய 3 பேர் கடற்பாசியை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும்.
இதற்காக ஒருவகை அமிலம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top