அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கோவிலுக்கு வந்த 2 மர்ம நபர்கள், கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்ற அவர்கள், அதனை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் உண்டியலை நோட்டமிட்டு திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.இந்தக் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயானக் கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர். இதனால் திருடப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் வரை பணம் இருந்திருக்கலாம் என்றுஇ கூறப்படுகிறது.இதற்கிடையே, தற்போது இந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன. மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் உண்டியலைத் திருடிச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top