கலெக்டர் கார் மோதி விவசாயி பலி! – ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே மாவட்ட கலெக்டர் கந்தசாமி சென்ற இனோவா கார், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஸ்கூட்டர் மீது மோதிய கார்கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி இனோவா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது.இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற வெள்ளாங்கோயிலைச் சேர்ந்த விவசாயி சண்முகம் உயிரிழந்தார்.விபத்து நடந்தது எப்படி?விவசாயி சண்முகம் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து (RTO) அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேறு வாகனத்தில் சென்ற கலெக்டர்விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கந்தசாமி வேறு வாகனத்தில் ஈரோட்டுக்குச் சென்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top